விமான விபத்தில் உயிரிழந்த நபர் 45 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு வந்த ஆச்சரியம்… இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்: வெளியான புகைப்படம்!!

420

சஜ்ஜத் டங்கல்…

விமான விபத்தில் உயிரிழந்ததாக கருத்தப்பட்ட நபர் 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளது, குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜ்ஜத் டங்கல். இவர் தன்னுடைய 25 வயதில், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடிகை ராணி சந்திரா குழுவுடன் கடந்த 1976-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சென்றுள்ளார்.

அதன் பின் அங்கிருந்து விமானம் மூலம் திரும்பிய போது, மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் உயிரிழந்தனர். இதில் சஜ்ஜத் டங்கலும் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் எண்ணியுள்ளனர்.

ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அந்த விமானத்தில் பயணிக்காமல் மும்பையிலே இருந்துள்ளார். இந்த விபத்தை கேள்விப்பட்ட அவர், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதால், மும்பையிலே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

சஜ்ஜத்தின் உண்மை நிலையை சமீபத்தில் அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவரை குடும்பத்தினருடன் நேற்று முன் தினம் சேர்த்து வைத்தது.

அப்போது தன் மகன் இறந்துவிட்டதாக எண்ணியிருந்த சஜ்ஜத் டங்கலின் தாய் பாத்திமா பீவி(91), மகன் உயிரோடு வருவதைக் கண்டு, இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கி அவரை கட்டியணைத்தார்.

இதே போன்று குடும்பத்தினரும் அவரை கண்கலங்கிய நிலையில் வரவேற்றனர், அவரது 91 வயது தாய் பாத்திமா பீவி இறந்ததாக கருதப்பட்ட தன் மகன் 45 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்தபோது கண்ணீர் மல்க வரவேற்றார்.