விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் : கோடி கணக்கில் பணத்தை இழந்த அரசியல் பிரமுகர்கள்!!

418

சேலம்…

சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் பெண் ஒருவரின் ஆசை அழைப்புக்கு மயங்கி வீடுதேடிச்சென்று வீடியோவில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட விவகாரத்தால் வெளிச்சத்திற்கு வந்த பிளாக்மெயில் சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

செல்போனில் மயக்கும் விதமாக பேசி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 அரசியல் பிரமுகர்களை விருந்து தருவதாக வீட்டுக்குவரவைத்து வீடியோ எடுத்து கோடிக்கணக்கில் பணம் பறித்த புகாருக்குள்ளாகி இருக்கும் பிளாக்மெயிலர் சூரமங்கலம் கலைச்செல்வி இவர்தான்..!

இடங்கனசாலை பேரூராட்சியில் செல்வாக்குள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த 6 பேரின் பட்டியலை தயாரித்த கலைச்செல்வி அதில் 3 பேரை மயக்கும் விதமாக பேசி ஒருவர் பின் ஒருவராக விருந்து தருவதாக கூறி தனது வீட்டுக்குவரவழைத்துள்ளார். அவர்களுடன் கலைசெல்வி நெருக்கமாக இருப்பதை வீடியோ பதிவு செய்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது

அந்த 3 பேரின்அந்தரங்க வீடியோக்களை காண்பித்து அந்த பெண்ணிடம் இருந்து காப்பாற்றுவது போல நடித்த செல்வம் என்பவர், கோடிக்கணக்கில் பேரம் பேசி பணம் பெற்ற நிலையில், தன்னிடம் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை அந்தந்த கட்சியின் தலைமைக்கு கலைசெல்வியே நேரடியாக சென்று புகாராக கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து கலைச்செல்வி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நாகேந்திரன் என்பவர் சேலம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் ஈரோட்டில் பதுங்கி இருந்த கலைச்செல்வியை காரில் தூக்கிச்சென்ற ரூபக் என்பவர் , அரசியல்பிரமுகர்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கலைசெல்வியிடம் வாக்குமூலமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அதில் அரசு வேலை வாங்கி தருவதாக தன்னிடம் ஆசைவார்த்தை கூறிய செல்வம், அந்த 6 பேருடன் ஆபாசமாக பேசவைத்ததாகவும் அதில் 3 பேர் மட்டுமே தனது ஆசை வலையில் சிக்கியதாகவும் கலைச்செல்வி கூறி இருந்தார்.

மேலும் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் அவரது காரில் சென்றுதான் கட்சியின் தலைமையிடம் புகார் அளித்ததாக கலைச்செல்வில் தெரிவித்திருந்தார். ரூபக்கிடம் இருந்து நள்ளிரவில் தப்பிய கலைச்செல்வி தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பதற்றத்துடன் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

இதையடுத்து பணப்பங்கீட்டு தகராறில் செல்வத்தின் தம்பி சீனிவாசனை தாக்கியதாக மகுடஞ்சாவடி போலீசார் ரூபக்கை கைது செய்த நிலையில் செல்வம் அண்ட் கோ செய்த பிளாக்மெயில் லீலைகள் ஒவ்வொன்றும் கலைசெல்வியின் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் அம்பலமானது

இதற்கிடையே நாகேந்திரனின் ஆதரவாளர்கள் தன்னை கடத்திச்சென்று செல்வத்துக்கு எதிராக பேசுமாறு மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக கூறி கலைச்செல்வி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதிய புகார் ஒன்றை அளித்தார்.

கலைச்செல்வியுடன் அந்தரங்க வீடியோவில் சிக்கிய 3 பேரில் 2 பேர் அவமானத்துக்கு பயந்து புகார் கொடுக்க முன்வராத நிலையில் நாகேந்திரன் மட்டும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. செல்வம் , கலைச்செல்வி உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து போல்கீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.