வீடியோ Callல் திருமணம் : போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : சுவாரஸ்ய சம்பவம்!!

627

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதனால் சிலரது திருமணம் வருடக்கணக்கில் தள்ளி போகின்றது.

இதையடுத்து தற்போது ஆன்லைன் திருமணம் பிரபலமாகி வருகின்றது. அந்த வகையில் கேரளாவில் Video Call மூலம் ஒரு திருமணம் நடந்துள்ளது. நிர்மல் என்பவர் நியூசிலாந்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கேரளாவில் வசிக்கும் கீர்த்தனா என்பவருடன் 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கீர்த்தனா ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கொரோனாவால் இவர்களது திருமணம் மூன்று ஆண்டுகள் தள்ளி சென்றுள்ளது.

இதற்கு மேல் காத்திருந்து எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த இந்த தம்பதி ஆன்லைனில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் Video Callல் திருமணம் நடந்துள்ளது.

போனை பெண்ணாக நினைத்து தாலி கட்டியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் சாட்சி கையெழுத்திட்டனர்.

இருவரின் திருமணம் நடந்து முடிந்த பிறகு தம்பதி தங்களது சந்தோஷத்தை ஆனந்த கண்ணீர் மூலம் பகிர்ந்து கொண்டனர்.