வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடி : பின்னர் அரங்கேறிய சோகம்!!

299

திருப்பூரில்….

திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண்(18). இவர் கோவையில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் புதுக்கோட்டையை சேர்ந்த வினிதா (18), என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

கடந்த, இரு மாதம் முன்பு, தனது காதலியை அழைத்து வந்து திருமணம் செய்து, திருப்பூர் மாவட்டம் இடுவாயில் தங்கியிருந்தார். இருநாட்கள் முன்பு, சரண் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

தற்போது படிப்பை தொடருமாறு அறிவுரை கூறிய பெற்றோர், புதுக்கோட்டை சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசி வருவதாக தெரிவித்தனர்.

இதனிடையே குடும்பத்தினர் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில், இருவரும் கடிதம் எழுதி வைத்து விட்டு,

வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்துவருகின்றனர்.