வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : நிலைகுலைந்த பெற்றோர்!!

310

திருவண்ணாமலை….

திருவண்ணாமலை அடுத்த பெரியபாலியப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரஜினி என்பவர் அதே பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி ரஜினி மீது வழக்கு பதிவிட்டு கைது செய்து போக்சோ தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைந்துள்ளார்.

பெரியபாலியப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் ரஜினி என்பவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதே தெருவில் பதினோராம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை குறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரியப்படுத்தினால் கிராமத்தில் அவப்பெயர் ஏற்படும் என்று கருதி 1098 சைல்டு லைன் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சைல்டு லைன் அலுவலர்கள் மாணவியை அழைத்து வந்து பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அலுவலர்கள் புகார் கொடுத்ததின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி பாலியல் தொல்லை கொடுத்த ரஜினி மீது வழக்கு பதிவிட்டு கைது செய்து இன்று வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

16 வயது சிறுமியின் பெற்றோர்கள் கூலி வேலை செய்வதற்காக சென்னையில் இருக்கிறார்கள். தனது பாட்டியுடன் வசித்து பள்ளிக்கு சென்று பயின்று வந்த நிலையில் அதே தெருவில் வசித்து வரும் ரஜினி பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.