வெட்ட வெட்ட வளரும் பெண்ணின் புருவம் : பரபரப்பை கிளப்பிய பின்னணி!!

614

இங்கிலாந்தில்….

இங்கிலாந்தில் வசிக்கும் 36 வயதான இசபெல் குட்க்ஸி (Isabelle Kutxi) என்ற பெண்ணின் புருவம், சற்று சிறிதாக இருந்துள்ளது. இதனால், அதனை சற்று பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் சுமார் அரை மணி நேரம் செலவு செய்து புருவத்தை வரைந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல், ஒவ்வொரு நாளும் இப்படி கண் புருவத்திற்காக வரைந்து கொண்டே இருப்பது, இசபெல்லுக்கு ஒரு வித விரக்தியை உண்டு பண்ணி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு முறை, டிவியில் புருவ மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பார்த்துள்ள இசபெல், இதற்காக தயாரும் ஆகி உள்ளார். அதன்படி, போலந்து நாட்டிற்கு சென்று, இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் செலவு செய்துள்ளார் இசபெல். மேலும், அவரது தலையின் பின்புறத்தில் இருந்து, தலை முடியை எடுத்து சுமார் மூன்றரை மணி நேரம், இந்த Hair Transplant சிகிச்சை நடந்துள்ளது.

அப்போது, தனது பெரிதான புருவத்தைக் கண்டு, உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரும் வடித்துள்ளார் இசபெல். ஆனால், அதே வேளையில் இசபெல்லுக்கு சிறிய சிக்கல் ஒன்றும் உருவாகி உள்ளது.

அதாவது, தலையில் இருந்து முடியை எடுத்து புருவத்தில் வைத்ததால், அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். புருவத்தை போல, பெரிய அளவில் வளராமல் இருப்பதற்கு பதிலாக, தலை முடி என்பதால் அடிக்கடி வளர்ந்து கொண்டே இருப்பதாக இசபெல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மாதம் ஒரு முறை, தனது நெருங்கிய தோழி ஒருவரின் பார்லர் சென்று தனது புருவ முடியை எடுப்பதாகவும் இசபெல் கூறி உள்ளார். முன்னதாக, தனது புருவம் சிறிதாக இருப்பதால் அதனை வெறுத்து வந்த இசபெல், முகத்தின் அருகே வைத்து செல்ஃபி ஃபோட்டோ கூட எடுக்க மாட்டாராம். ஆனால், தற்போது Hair Transplant செய்து புருவ முடி பெரிதாகி உள்ளதால், அது தனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் இசபெல் தெரிவித்துள்ளார்.

இப்படி தலை முடியை எடுத்து வைத்துள்ளதால், அது அடிக்கடி வளர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தினால் வேறு ஏதேனும் பிரச்சனை வருங்காலத்தில் உருவாகுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.