வெளிநாட்டில் சிறையில் வாடும் தமிழர் : 9 ஆண்டுகளுக்கு பின்னர் நேரில் சந்தித்த மகன் புற்றுநோயால் ம ரணம்!!

559

மகன் புற்றுநோயால் ம ரணம்….

சவுதி அரேபியாவில் சிறையில் வாடும் தந்தையை 9 ஆண்டு போ ராட்டங்களுக்கு பின்னர் நேரில் சந்தித்து திரும்பிய சிறுவன் புற்றுநோயால் ம ரணமடைந்துள்ளான்.

சவுதி அரேபியாவின் ஜிஸான் சிறையில் வாடும் தமது தந்தையை நேரில் காண வேண்டும், அத்துடன் புனித நகரங்களான மெக்கா மற்றும் மெதீனா செல்ல வேண்டும் என்பது 14 வயதான சக்கீர் உசைனின் ஒரே ஒரு ஆசையாக இருந்துள்ளது. தமது ஆசையை குரான் பயின்று வந்த கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தவும் செய்துள்ளார்.

இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படவே, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சிறுவன் சக்கீர் உசைன் கடந்த ஜனவரி மாதம் சவுதி சிறைச்சாலையில் உள்ள தமது தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.

புனித நகரங்களில் சென்று பிரார்த்தனை முடித்து, கூடவே தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற சிறுவன் சக்கீருக்கு 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது தாயாரும் இரு உறவினர்களும் கூடவே இருந்துள்ளனர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள சக்கீர் உசைன் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.