வேலை பார்த்து வந்த பெண் நூதனமாக செய்து வந்த மோசமான செயல்!!

286

தெலுங்கானா…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூதாட்டி ஹேமாவதி (73). ஹேமாவதியின் மகன் சஷிதர் லண்டலில் இருப்பதால் தாயை பார்த்துக்கொள்ள பார்கவி (30) என்ற பெண்ணை கடந்தாண்டு வீட்டோடு வேலைக்கு வைத்துள்ளார். பார்கவி தனது 7 வயது மகளுடன் ஹேமாவதி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசான அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அதை சரி செய்வதாக கூறிய பார்கவி, பாத்ரூமை சுத்தப்படுத்த உதவும் ஹார்பிக்குடன் தைலம் கலந்து ஹேமாவதியின் கண்களில் விட்டுள்ளார். இதனால் ஹேமாவதியின் கண்களில் எரிச்சல் அதிகமாகியுள்ளது. சில நாட்களில் கண் பார்வையும் குறைந்துள்ளது.

இது குறித்து லண்டனில் உள்ள மகன் சஷிதரிடம் மூதாட்டி தெரிவித்துள்ளார். அவர் அறிவுறுத்தலின் பேரில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு மூதாட்டியை அவரது மகள் ஊர்வசி அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதித்ததில், மூதாட்டியின் கண்கள் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. ஆனால், காரணம் என்னவென்று தெரியவில்லை. சில நாட்களில் கண் பார்வையை மூதாட்டி முழுவதுமாக இழந்துள்ளார். இந்நிலையில், லண்டலில் இருந்து வந்த சஷிதர் தாயை ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளார்.

பரிசோதனைக்கு பின்பு மூதாட்டியின் கண்களில் கெமிக்கல் ஊற்றப்பட்டதால் கண் பார்வை இழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சஷிதருக்கு வேலைக்கார பெண் பார்கவி மீது சந்தேகம் ஏற்படவே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில், மூதாட்டியுடன் வீட்டில் இருந்த பணத்தையும், நகைகளையும் திருட வெகு நாள் திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் மூதாட்டியின் கண் பார்வையை இழக்க செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

மேலும், ஹேமாவதியின் வீட்டில் இருந்து திருடிய 40 ஆயிரம் ரூபாய், இரண்டு தங்க வளையல், ஒரு தங்க செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பார்கவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.