வைரங்கள், ரத்தினங்களில் பேரழகியாய் ஜொலிக்கும் அம்பானி மகள் : செலவு எவ்வளவு தெரியுமா?

632

இஷா அம்பானி

அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் டிசம்பர் 12ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. திருமண வேலைகள் அனைத்தும் தொடங்கிவிட்ட நிலையில், 3 லட்சம் மதிப்பிலான திருமண பத்திரிகையை அனைவருக்கும் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திருமண பத்திரிகை பெட்டிக்குள், விலையுயர்ந்த கற்கள், தெய்வங்களின் படங்கள் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. மேலும், இந்தியாவின் முக்கிய கோயில்களுக்கு சென்று பத்திரிகையை வைத்து முகேஷ் அம்பானி வழிபட்டு வருகிறார்.

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய கிரஹ சாந்தி பூஜையை முன்னிட்டு போட்டோஷீட்டை அம்பானி மகள் இஷா நடத்தியுள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் Sabyasachi வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்துள்ளார்.

பெயிண்ட் டிசைன் மற்றும் எம்பிராயிடிங் செய்யப்பட்ட இந்த லெஹங்காவுக்கு நெக்லஸ் மற்றும் காதணி தொகுப்பு வெட்டப்படாத சிண்டிகேட் வைரங்கள் மற்றும் சாம்பியன் ரத்தினங்கள் வைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர் அணிந்திருக்கும் ஆடைகள் மற்றும் நகைகள், இஷாவின் கண்களை மிகவும் பிரகாசமாக காட்டுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.