வைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்!

869

அதிமதுர கஷாயம்..

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அற்புத மூலிகையாகும். அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

குறிப்பாக வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் அதிமதுரம் கொண்டு செய்யும் கஷாயத்தைக் குடிக்கத் துவங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • கருப்பு மிளகு – 6-7
  • அதிமதுரம் – ஒரு துண்டு
  • துளசி – 7-8 இலை
  • இஞ்சி – ஒரு துண்டு
  • தண்ணீர்
  • மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
  • தேன்- சிறிதளவு

செய்முறை

  • ஒரு கிளாஸ் தண்ணீரில் 6-7 கருப்பு மிளகை அரைத்து அல்லது பொடி செய்து போடவும். அதில் ஒரு துண்டு அதிமதுரத்தைப் போடவும். அதனுடன் துளசியின் 7-8 இலைகளை சேர்க்கவும்.
  • இதற்குப் பிறகு, ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து தண்ணீரில் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க விடவும். இது கொதித்து பாதியாக குறைந்தவுடன், ​​அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று கொதி வரவிடுங்கள்.
  • இதற்குப் பிறகு, இதை வடிகட்டி, ஆறவைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இந்த அதிமதுரத்தின் கஷாயத்தை காலையில் குடிப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும்.

நன்மைகள்

அதிமதுரம் கஷாயம் கொரோனா வைரஸைத் தவிர்க்க உதவுவது மட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மீட்பு செயல் முறையை விரைவுப்படுத்தவும் உதவுகிறது.

அதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. அவை கீழ்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கீழ்வாதம் நோயாளிகளுக்கு, அதிமதுரம் கஷாயம் கொடுப்பது நன்மை பயக்கும்.