கர்நாடக…
மாணவர் விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் அடைத்து தூக்கிச்சென்ற மாணவர் ஒருவர் காவலாளிகளின் சோதனையின் போது பிடிபட்டார். டிராவல் பேக்கில் இருந்து வெளிவந்த காதல் டிராகுலாவின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதாக கூறப்படும் பழமொழியை கேள்வி பட்டுள்ளோம், அந்தவகையில் கல்லூரி மாணவர் ஒருவரின் டிராவல் பேக்கிற்குள் இருந்து டிராகுலா போல இளம் பெண் ஒருவர் வெளியே வந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள எம்.ஐ.டி பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கிப்படித்து வரும் மாணவர் ஒருவர், தனது காதலியை, நிர்வாகத்திற்கு தெரியாமல், தான் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து டிராவல் பேக் ஒன்றை வாங்கி அதற்குள் தனது காதலியை கை கால்களை மடக்கி படுத்துக் கொள்ள வைத்து, டிராவல் பேக்கை மூடி, அப்படியே விடுதிக்குள் தூக்கிச்செல்ல முயன்றுள்ளார்.
விடுதி வாசலில் காவலாளிகள் ஒவ்வொரு மாணவரின் உடமைகளையும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிப்பது வழக்கம் என்பதால் டிராவல் பேக்கை திறந்து காட்ட சொன்னதாகவும் அப்போது அந்த மாணவர் விலகி நிற்க காவலாளி ஒருவர், தயத்துடனேயே அந்த டிராவல் பேக்கை திறக்க , அதன் உள் இருந்து டிராகுலா போல திடுக்கென்று வெளியே வந்தார் அந்த மாணவனின் காதலி.
இதனை கண்ட அங்கிருந்த காவலாளிகளும் , சக மாணவர்களும் அதிர்ந்து போயினர். கையும் களவுமாக சிக்கிக் கொண்ட அந்த மாணவனோ தலையில் கைவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
இத்தனை களே பாரங்களுக்கும் நடுவே டிராவல் பேக்கிற்குள் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணோ எதோ எக்ஸிபிசன் போயிட்டு வந்த மாதிரி உற்சாகமாக காணப்பட்டார்.
சில மாதங்களுக்கு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.