ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவர்.. கோடிகளில் புகழும் இவர் எ திர்கொள்ளப்போகும் ச வால் என்ன?

284

தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில், ஒரு லட்சம் கோடி சொத்து ம திப்பு கொ ண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் த லைவராக சிவநாடார் இருந்து வந்தார். இந்த நிலையில் சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா இன்று ஹெச்.சி.எல்லின் தலைவராகப் பொ றுப்பேற்றுக் கொ ண்டார்.

மேலிம், IIFL Wealth Hurun India வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்தியாவிலேயே பணக்கார பெண் ரோஷினி நாடார் ஆவார் இவரின் சொத்து மதிப்பு ரூ 31400 கோடி ஆகும்.

கடந்த 2017, 2018, 2019 ஆண்டுகளில் தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் ரோஷினி இடம் பெற்றிருந்தார். டெல்லியில் பிறந்த ரோஷினி, அமெரிக்காவின் எம்.பி .ஏ பட்டம் பெற்றவர்.

38 வயதாகும் ரோஷினி, தற்போது வரை ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அ திகா ரியாகவும் ஹெச். சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் த லைவராகவும் இருந்து வந்தார். அவர் சென்னையில் உள்ள பிரபல சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் சிவநாடார் அறக்கட்டளையில் உறுப்பினராகவும் ரோஷினி நாடார் உள்ளார்.

ஷிக்தர் மல்கோத்ரா என்பவரைத் தி ருமணம் செய்துகொண்ட ரோஷினி த ம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது பொறுப்பேற்றுள்ள ரோஷினிக்கு, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சி க்கல்களை எ திர்கொள்வது என்பது பெரும் ச வாலாகப் பா ர்க்கப்படுகிறது.