ஹெலிகாப்டராக மாறிய நானோ கார்… சுவாரஸ்ய தகவல்!!

199

பீகார்….

திருமணங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று ஒவ்வொரு திருமணமனமும் ஒவ்வொருவரின் வாழ்கையில் நீக்க நினைவாக இருப்பது.

இந்த திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பல வித விதமான ஏற்பாடுகளை தம்பதியினர் செய்வார்கள் இதில் இன்று வட இந்தியாவில் பிரபலமாக உள்ள திருமணத்தன்று அல்லது திருமணம் முடித்து மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஹெலிகாப்டரில் அழைத்து செல்வது என்பது டிரெண்டாகியுள்ளது.

சமீபத்தில் அப்படியாக உண்மையிலேயே மறுமகளை மாமியார்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லும் சம்பவம் வட இந்தியாவில் அதிகம் நடந்துள்ளது.

ஆனால் ஹெலிகாப்டர் என்பது அதிக செலவில் செய்ய வேண்டிய ஒரு விஷயம். எழைகளால் அந்த கனவை நினைவாக்க முடியாது.

இந்நிலையில் பீகார் மாநிலம் மேற்கு சாப்ரான் மாவட்டம் பாகஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்துள்ளார். இந்த காரை அவர் திருமண ஊர்வலங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த காரை தற்போது ஹெலிகாப்டர் தோற்றத்தில் மாற்றம் பணி தற்போது தான் நடந்து வரும் நிலையில் இதை கேள்விபட்ட பலர் இந்த ஹெலிகாப்டர் நானோ காரை தங்கள் திருமணத்திற்கு புக்கிங் செய்ய துவங்கிவிட்டனர். இதுவரை 20 க்கும் அதிகமான புக்கிங்கள் நடந்துள்ளது.