அஜித் பிறந்தநாளில் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு அளவில்லா ஆனந்தம்!

561

சிவகார்த்திகேயன் தன் திறமையால் மிகவும் உழைத்து இன்று சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களும் பாராட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்.

மற்ற நடிகர்களுக்கும், சினிமாவில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். அவருக்கு அஜித்தின் குணங்கள் மிகவும் பிடிக்கும். இதை அவரே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

அஜித்தின் பிறந்தநாளான இதே மே 1 ல் கடந்த 2013 ல் சிவா நடித்த எதிர்நீச்சல் வெளியானது. படத்தை தனுஷ் தயாரிக்க, துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டானது.

அனிருத் இயக்கத்தில் பாடல்களும் சூப்பர் ஹிட். அதிலும் பூமி என்ன சுத்துதே அனைத்து சானல்களிலும், ரேடியோ FM களிலும் அதிகமான இடத்தை பிடித்தது. குழந்தைகளை இது மிகவும் கவர்ந்தது என சொல்லலாம்.

இப்படம் வெளியாகி இன்று ஐந்து வருடத்தை கடந்துவிட்டது. இது படக்குழுவிற்கும் சிவாவிற்கும் மிகுந்த சந்தோசம்.. உழைப்பாளர் தின வாழ்த்துக்களுடன் இன்னும் நீங்கள் உயர விரும்புகிறோம்…