அண்டார்டிகாவில் உருகும் ராட்சத பனிப்பாறை! ஆபத்தில் உலகநாடுகள்!!

726

அண்டார்டிகாவில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் பிரான்ஸ் நாட்டின் அளவுக்கு ஈடான மிகபெரிய ராட்சத பனிப்பாறை உருகி கரையும் நிலையில் உள்ளது.

அந்த பனிப்பாறைக்கு ‘ராட்டன்’ பனிப்பாறை என பெயரிட்டுள்ளனர். பொதுவாக பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகி வருகின்றன.

இதுகுறித்து நாசா ஆய்வுநடத்தியதில் பனிக்கட்டிகள் உருகுவதால் அண்டார்டிகா ஆண்டுக்கு 125 ஜிகா டன் ஐஸ் கட்டிகளை இழக்கிறது.

இதன்மூலம் உலக அளவில் ஆண்டுக்கு 0.35 மில்லி மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயருகிறது என கண்டுபிடித்தது.

இந்நிலையில் ராட்சத பனிப்பாறையும் உருக தொடங்கிவிட்டதால் அது மெல்ல நகர்ந்து பல நூறு மைல் தூரத்தை கடந்து விட்டது.

இது முழுவதுமாக கரைந்துவிட்டால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகள், தீவுக்கூட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கபட்டுள்ளது.