அதிகமாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? வாங்க தெரிந்து கொள்வோம்!!

481

சாக்லேட்…

சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம்.

அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால் தீமைகளையும் அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்க்கு ஆசைப்படுவது உண்டு.

சரி வாங்க சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

  • கொலஸ்ட்ராலை, இரத்த அழுத்தத்தை போன்றவற்றை குறைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வயது முதிர்வை தடுக்கின்றது. சாக்லேட்டில் கார்லிக் அமிலம் அதிகமாக இருப்பதால் இதயத்திற்கு வலு சேர்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான பாதிக்குகள் குறையும்.

  • வயது அதிகரிக்கும் போது நரம்பின் செயல்பாடுகள் குறையும். இத்தகைய குறைப்பாடுகள் எளிதில் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் பாதிக்கப்படுவதில் இருந்து காக்கின்றது.

  • சீறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் நன்மை பயக்குகிறது. இரத்த திட்டுகள் ஒன்றுடன் ஒன்று கொத்தாக சேராமல் பாதுகாக்கிறது. இதனால் இரத்த உறைவது தவிர்க்கப்படுகின்றது.

தீமைகள்:-

  • மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களை தடுத்து நிறுத்தி ஒற்றை தலைவலியை தூண்டும். அதுபோல அக்கி நோயில் இருந்து மீண்டவர்கள் டார்க் சாக்லேட்கள் உண்ணாமல் இருப்பது நல்லது.

  • சாக்லேட்டில் சேர்க்கப்படும் அதிக அளவு சர்க்கரையால் பற்கள் அழுகும் நிலை ஏற்படலாம். இதனால் சர்க்கரைக்கு பதில் சுத்தமான கருப்பு சாறை பயன்படுத்தலாம்.

  • சாக்லேட் உண்பதால் உடம்பில் அதிக அளவு கலோரிகள் ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை உருவாக்கி உடல் பருமன் அடையை வாய்ப்புள்ளது. அதனால் டயட்டில் இருப்பவர்கள் சாக்லெட்டை எடுத்து கொள்ளாதீர்கள்.