பன்னீர்…
சைவ உணவு உண்பவர்களுக்கு நன்மை பயக்கும் உணவாக பன்னீர் உள்ளது, ஏனெனில் பனீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது.
மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது. இருப்பினும் இதனை அளவாக எடுத்து கொள்வது நல்லது.
இல்லாவிடின் இது பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.அந்தவகையில் பன்னீர் அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன பிரச்சினைகளை ஏற்படுத்தும்?
பன்னீரை அதிகமாக சாப்பிடும்போது புரதமானது நீண்ட நேரம் வயிற்றில் தங்கியிருப்பதாலும், அதிக புரதத்தை நாம் சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் குமட்டல், அடிவயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும்.
பன்னீரை சமைக்காமல் உண்பது செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் அஜீரண பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் இது முழுமையாக செரிக்க அதிக நேரம் எடுக்கும். சமைக்காத பன்னீரை எடுத்து கொள்ளலாமா?
சமைக்காத பன்னீர் மற்றும் அதிக பனீர் உண்பது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது .எனவே மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களுடன் பனீரை சமைக்கலாம். அது எளிதில் ஜீரணமாகும்.
முடிந்த அளவு பிரித்து வைத்து ஒவ்வொரு வேளைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பனீரை எடுத்துக்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.