கடந்த ஆண்டு பிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி பெரும் வெற்றியை எட்டியது இந்த நிகழ்ச்சி.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்ள போகிறார் என்று தகவல்கள் வெளியாகியது.
நடிகை ராய் லட்சுமி, தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார், மேலும் சில ஆண்டுகளாக தமிழில் எந்த படத்திலும் வாய்ப்பில்லாமல் இருந்த இவர், கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜூலி 2 என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து இழந்த தனது மார்க்கெட்டை மீட்டுக்கொன்டார் . அதன் பிறகு தற்போது தமிழில் யார், நீயா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பட்டியலில் நடிகை ராய் லட்சுமியன் பெயரும் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து நடிகை ராய் லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் எதற்காக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர் ? ஏன் ? ஏன் ? என்று பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவிற்கு ரீடிவீட் செய்திருந்த பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாஸுவின் கணவர் கரண் வி குருவர், நாங்கள் உங்களை பிக் பாஸ் 2 வீட்டில் பார்க்க விரும்புகிறோம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராய் லட்சுமி நீங்கள் என் துணையாக வந்தால் நான் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றுமொறு ரசிகர் நானும் உங்களை அந்த நிகழ்ச்சியில் காண விரும்புகிறேன் என்று கூறியதற்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தீ பற்றிக்கொள்ளும் என்று பதிலளித்துள்ளார் ராய் லட்சுமி.