இந்தியாவின் வட இந்திய பெண்கள் அணியும் மாங்கல்யம் அதிகமாக கருப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.தங்களுக்கு பிடித்த வகையில், பல்வேறு மொடல்களில் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட மாங்கல்யத்தை அணிகிறார்கள்.
குறிப்பாக வட இந்திய நடிகைகள் அணியும் மாங்கல்யத்தின் விலை அதிகமானதாக இருக்கும்.சமீபத்தில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா சர்மா, 52 லட்சம் மதிப்பிலான மாங்கல்யத்தை அணிந்துகொண்டார்.
இவர் மட்டுமின்றி, பாலிவுட் நட்சத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், 27 லட்சம் மதிப்பிலான மாங்கல்யம், கரிஷ்மா கபூர் 17 லட்சம் மதிப்பிலான மாங்கல்யம் அணிந்துள்ளனர்.அனுஷ்கா சர்மாவுக்கு திருமண பரிசாக சுமார், 60 லட்சம் மதிப்பிலான மோதிரத்தை விராட் கோஹ்லி அணிவித்தது குறிப்பிடத்தக்கது.