அன்று லண்டனில் வேலை செய்து வந்த தமிழச்சி இன்று அனைத்து பெண்களுக்கும் ரோல் மாடலாக மாறியது எப்படி?

1049

சம்யுக்தா பிரேம்

தமிழகத்தைச் சேர்ந்தவரும், Mrs India Universe Globe பட்டத்தை தட்டிச் சென்றவருமான சம்யுக்தா பிரேம் தன்னுடைய வெற்றியின் ரகசியத்தை கூறியுள்ளார். கோயமுத்தூரைச் சேர்ந்தவர் சம்யுக்தா பிரேம். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று, Mrs India Universe Globe பட்டதைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

திருமணம்தான் நம்ம சுதந்திரத்துக்கு முடிவு என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்கும்போது, சர்வதேச திருமதி அழகிப் போட்டிக்குத் தேர்வாகி, பல தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ரோல்மாடலாகியிருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச திருமதி அழகிப் போட்டியில் பங்குபெற்ற ஒரே தமிழ்ப் பெண்ணான சம்யுக்தா தன்னுடைய வெற்றி பற்றி கூறியுள்ளார். அதில் நான் படித்தது எல்லாம் பேஷன் சம்பந்தமான படிப்புதான். படித்து முடித்தவுடன் லண்டனில் சர்வதேச பிராண்டான பிராடாவோடு இணைந்து வேலை செய்து வந்தேன்.

அதன் பின் எனக்கு திருமணம் ஆகியதால், இல்லத்தரசியாக மாறினேன். நான் முன்னரே பேஷன் பீல்டில் இருந்த போது, அழகிப் போட்டிகள்ல பங்கேற்பது மிகவும் ஆசையாக இருக்கும்.

ஆனால் அப்போது நான் தீவிரமாக இல்லை. இதையடுத்து அந்த ஆசையை என் கணவரிடம் நான் சொன்னபோது, அடுத்து வரும் திருமதி போட்டியில அவசியம் நீ கலந்து கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

அவருடைய ஆதரவு மட்டும் இல்லையென்றால், நான் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. இது போன்ற ஆதரவு கிடைத்தால், நிறைய பெண்கள் அவர்களுடைய கனவுகளை நினைவாக்க முடியும்.

திருமணம் ஆன பெண்கள் இது போட்டியில் சந்திக்கும் சவாலே உடல் எடை பிரச்சனை தான், திருமணம் முடிந்துவிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும். நான் திருமணத்துக்குப் பிறகு 90 கிலோ எடை இருந்தேன். கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் பழக்கத்தால இப்போ 60 கிலோ இருக்கேன்.

கடுமையான பிளான் இல்லை என்றால் இப்படி குறைச்சிருக்கவே முடியாது. என்னோட passion மேல நான் வைத்திருந்த அன்புகூட இதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமின்றி குடும்பத்தாரின் ஆதரவு மிகவும் முக்கியம். அவர்களின் ஊக்குவிப்பு இல்லையென்றால் மிகவும் கஷ்டம். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் கணவர், அம்மா, அப்பா எல்லோருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் பேஷன் என்றாலே தமிழ்ப் பெண்களுக்கு ஆகாது. அதுவும் திருமணமான பெண்கள் நினைத்து கூட பார்க்க கூடாது என்று பலரும் கூறுகின்றனர்.

ஆனால் என்னை பொறுத்த வரை அதுபோன்ற பாகுபாடுகள் எல்லாம் பார்ப்பது இல்லை, அங்கு இருக்கும் மக்கள் எல்லோரும் அன்பாக பழகக்கூடியவர்கள். நாம் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்தே, அவர்களும் நம்மிடம் பழகுவார்கள். நம் மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் எந்த ஒரு பயமும் தேவையில்லை.

இந்த பயணத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது, வெவ்வேறு கலாசாரத்திலிருந்து வந்தவர்களைச் சந்திக்க நல்ல வாய்ப்பாக இருந்தது. சைக்காலஜிஸ்ட், ஸ்டைலிஸ்ட், கோரியோகிராபர் என்று நிறைய மனிதர்களை சந்தித்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.

வேலைகளைப் பார்த்துட்டு, குடும்பத்தையும் எப்படி கவனிப்பது, நம் உடம்பை எப்படி ஆரோக்கியமா வைத்து கொள்வது, வாழ்க்கையை மேம்படுத்துற வழிமுறைகளையும் இந்த பயணத்தின் மூலம் கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.