அம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்? அடுத்தடுத்து களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

830

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

முகேஷ் – நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில், இரட்டையர்களான ஆகாஷ் தனது பள்ளி தோழியான ஸ்லோகா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஸ்லோகா வைரவியாபாரியின் மகள் ஆவார். இஷா அம்பானிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், தொழிலதிபர் ஆனந்த் ப்ரமோலுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆகாஷ் மற்றும் இஷாவின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், 3வது மகனான ஆனந்த் அம்பானி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Radhika Merchant என்ற பெண்ணுடன் ஆனந்த் அம்பானி இருக்கும் புகைப்படம Hello magazine- இல் வெளியாகியுள்ளது.

இவர், ஆனந்த் அம்பானியின் தோழி என கூறப்படுகிறது. ஆனால் இவர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இப்பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகவும், டிசம்பர் மாதம் அம்பானி வீட்டில் 3 பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.