அம்பானி வீட்டு திருமணத்துக்கு போட்டி : வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆச்சரிய நிகழ்வு!!

1517

ஆச்சரிய நிகழ்வு

அம்பானி மகளின் பிரம்மாண்ட திருமணம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பாகிஸ்தானிலும் அதே போல ஒரு நிகழ்ச்சி நடந்துப்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா – ஆனந்த் திருமணம் கடந்த 12ஆம் திகதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. திருமணத்தில் நடத்தப்பட்ட ஒவ்வொரு விடயங்களும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்டது.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இந்த திருமணம் வைரலானது என்பதை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தானின் கராச்சியில் பார்ட்டி ஒன்று நடந்துள்ளது.

அதாவது அம்பானி வீட்டு திருமணத்தில் இருந்த கலாச்சாரம், பாரம்பரியம், ஃபேஷன் மற்றும் இசை ஆகியவையால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தான் மொடல் அலியா ஜாயாடீ, பிரீயா அல்டாப் ஆகியோர் முக்கிய பிரபலங்களை வைத்து அம்பானி திருமணம் போலவே ஒரு பார்ட்டி நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

எப்படி அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல நடிகர்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டார்களே அதே போல அவர்களின் முகமூடி அணிந்த நபர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

அம்பானி வீட்டு திருமணத்தில் இருந்தது போன்ற பல விடயங்கள் இந்த பார்ட்டியிலும் வியக்கவைக்கும் வண்ணம் செய்யப்பட்டன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.