ஆயிரா…
பிரபலங்களை குழந்தைப் பருவ புகைப்படமாகப் பார்ப்பது மிகவும் அழகானது. அது நம்மை வெகுவாக ரசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இப்போது ஒரு குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்க்கவே துரு, துருவென அழகாக இருக்கும் இந்தக் குழந்தை இப்போது தமிழில் உச்ச நட்சத்திரமாகவும் உள்ளது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத விளம்பரங்களின் ஒன்று அரசன் சோப்பு. இந்த விளம்பரத்தின் இசையும், அதில் நடித்த குழந்தையின் க்யூட் ரியாக்சனும் இந்த விளம்பரத்தை அனைவருக்கும் பிடிக்கவைத்தது. அந்த விளம்பரத்தில் ஆயிரா என்னும் குழந்தை நடித்தது.
இப்போது வளர்ந்து பருவ மங்கையாக செம க்யூட்டாக இருக்கிறார்.
விளம்பரத்தின் இறுதியில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்..என க்யூட்டாகச் சொல்லும் ஆயிரா இதுவரை 250க்கும் அதிகமாக விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த ஆயிரா தான் நம் தளபதி விஜய் நடித்த தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்திருந்தார். அம்மணி, சீக்கிரமே மெயின் நாயகியாகவும் களம் இறங்குகிறார்.