அரசு பள்ளி பெண் ஊழியர் தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

612

தருமபுரி….

தருமபுரி அருகே பள்ளி மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயலும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கிரிஜா என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதேப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக சாந்தி பணியாற்றி வருகிறார்.

தலைமை ஆசிரியை சாந்தி கிரிஜாவை அடிக்கடி ஏதாவது கூறி டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கிரிஜா மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். இன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்த சத்துணவு அமைப்பாளர் கிரிஜாவை தலைமை ஆசிரியை சாந்தி பள்ளி மாணவர்கள் முன் அவமானப்படுத்தி கேவலமாக பேசிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியின் சத்துணவு அறையில் கிரிஜா அதிகப்படியான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலும் வீடியோவை செல்போனில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் கிரிஜா ‘ என பிள்ளையை என் அம்மாவிடம் ஒப்படைத்து விடுங்கள்… என்னை சின்ன பசங்களுக்கு முன்பு அவமானப்படுத்துகின்றனர்’ என கதறி அழுதவர் டப்பாவில் இருந்த மாத்திரைகளை முழுவதுமாக விழுங்கியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்விதுறை அதிகாரிகளும், காரிமங்கலம் காவல்துறையினரும் தலைமை ஆசிரியை மற்றும் அப்பள்ளியில் பணயிற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.