நடிகை அதிதி பாலன் தன்னை தேடி வந்த சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளாராம். அருவி படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் அதிதி பாலன். அதிதி என்ற பெயரை விட்டுவிட்டு அவரை ரசிகர்கள் அருவி என்றே அன்புடன் அழைக்கிறார்கள்.
ஒரே படத்தில் தூள் கிளப்பிய அதிதியை தங்களின் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விரும்புகிறார்கள். ஆனால் அம்மணியோ கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமாக உள்ளாராம். அருவி படம் மூலம் கிடைத்த பெயரை ஏதோ ஒரு படத்தில் நடித்து கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் அதிதி.
அவர் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிக்க வேண்டுமே என்பதற்காக அவசரப்பட்டு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று அதிதி தெரிவித்துள்ளார். சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்வது தான் கடினம் என்றார்கள். இனி யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள்.