மகாராஷ்டிரா….
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சயாலி ஷஹாசனே (வயது 27). இவர் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சயாலியும், அவருடைய கல்லூரியில் பயின்ற அருண் நாயக் என்பவரும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, எப்போதும் வழக்கமாக செல்லும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து, அன்றைய இரவில் இவர்கள் அறையிலுள்ள டிவியின் சத்தம், அதிகமாக கேட்டுள்ளது. வழக்கமாக வருபவர்கள் என்பதால், ஹோட்டலில் உள்ளவர்கள் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனிடையே, மறுநாள் காலை வரை அந்த அறையிலிருந்து டிவி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பேரதிர்ச்சி காத்திருந்தது.
இளம் பெண் சயாலி, ரத்த காயங்களுடன் அறைக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரின் காதலன் அருண் நாயக் அங்கு இல்லை என கூறப்படுகிறது. சயாலியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பெண்ணின் தந்தை இது பற்றி பேசுகையில், “அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.
பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும், திருமணம் செய்து கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தற்போது என் மகளுக்கு ஏன் இப்படி நடந்தது என்று புரியவில்லை” என கண்ணீருடன் சயாலியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் பற்றி ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, வேறு சில தகவல்களும் தெரிய வந்தது. “இந்த ஜோடிகள் கடந்த 7 ஆண்டுகளாக எங்களின் ஹோட்டலுக்கு அடிக்கடி வருபவர்கள் தான். அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களை நன்கு தெரியும்.
அப்படி தான், கடந்த 27 ஆம் தேதி, இருந்த ஜோடி ஒரே அறையில் இருந்தனர். அன்று மாலை 5:30 மணிக்கு, சில உணவு பொருட்களை ஆர்டர் செய்த அருண் நாயக், அதற்கான பில்லையும், சுமார் 6 மணியளவில் ஆப் மூலம் செலுத்தினார்.
தொடர்ந்து, திங்கட்கிழமை காலை முதல் அவர்களின் அறையில், எந்த வித அசைவும் தெரியவில்லை. மேலும், இரவு முழுவதும் டிவியின் சத்தமும் அதிகமாகவே இருந்தது. எங்களின் அழைப்பையும் அவர்கள் யாரும் எடுக்கவில்லை. இதனால், சந்தேகத்தின் பெயரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் இங்கு வந்து அறையில் சோதித்த போது, இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது’ என தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில், பெண்ணின் கழுத்து இறுக்கப்பட்டு, அதன் பின்னர் ஆயுதத்தைக் கொண்டு தாக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.