அழகில் மிரட்டும் மஹிமா நம்பியார்.. குஷியான ரசிகர்கள்!!

423

மஹிமா நம்பியார்..

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.

இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார்.

இந்த நிலையில், தற்போது, அழகான உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து இளசுகள் சொக்கிப்போயி லைக்குகளை குவித்து வருகின்றனர்.