அழகி பட்டத்தை இழந்த பெண் : ஏன் தகுதி இழந்தார் தெரியுமா?

1119

அழகி

உக்ரைன் நாட்டில் அழகிப்பட்டம் பெற்ற பெண் ஒருவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றுக்கு தாயாகியதை மறைத்ததால் அவரது அழகிப்பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

சென்ற வியாழக்கிழமை Veronika Didusenko (23), 2018ஆம் ஆண்டிற்கான மிஸ் உக்ரேன் பட்டம் சூட்டப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருப்பதும், அவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்தது. அழகிப்போட்டி விதிமுறைகளின்படி திருமணமானவர்கள் மற்றும் குழந்தை பெற்றவர்கள் அழகிப் போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.

நேற்று அழகிப்போட்டி நடத்தும் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Didusenko விதிகளை மீறி விட்டதால், மிஸ் உக்ரைன் பட்டத்தை சுமக்க அவருக்கு தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்து சீனாவில் நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் அவருக்கு பதில் வேறொரு போட்டியாளர் பங்கேற்பார்.