நந்திதா..
தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவருடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நந்திதா நடித்த குமுதா கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
நம்ம குமுதாவை இது என்றும் நந்திதா உடல் எடை கூடியதால் 80’s சென்றுவிட்டார் எனவும் அதனால் இனிமேல் ஹீரோயின் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்க முடியாது சைடு கேரக்டர்தான் நடிக்க முடியும் என கிண்டல் செய்கின்றனர்.
இதற்கு கோபப்பட்டு பதிலளித்த நந்திதா மற்றப் பெண்கள் போல் தான் நானும் ஒரு சாதாரண பெண். நான் ஒன்னும் கடவுள் இல்லை. எப்படி உங்களால இப்படி யோசிக்க முடியுது, இது மாதிரி வார்த்தைகளை பயன்படுத்த முடிகிறது. இது மாதிரி போன்றவர்களால்தான் நரகத்தில் உள்ளது போல் இருக்கிறது.
உடல் எடையால் நானும் கஷ்டப்படுகிறேன். ஆனால் இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது, என் உடலை நான் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் படத்தில் நந்திதா 3வது கதாநாயகியாக நடிக்க உள்ளார்.