கிரிக்கெட் வீரர்கள்……………
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக தொழில்புரிவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுராஜ் ரன்தீவும் சிந்தக ஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற நிறுவனத்தில் பேருந்து சாரதிகளாக பணி புரிகின்றனர்.
இவர்கள் பேருந்து சாரதிகளாக பணியாற்றுவதுடன் உள்ளூர் கழகமொன்றிற்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
1200க்கும் மேற்பட்டவர்கள் சாரதிகளாக பணியாற்றும் டிரானஸ்டெவ் என்ற நிறுவனமே இவர்களை சாரதிகளாக சேர்த்துக்கொண்டுள்ளது.
சுராஜ் ரன்தீவ் தனது சாரதி தொழிலுக்கு அப்பால் உள்ளூர் கழகமொன்றின் கிரிக்கெட் நடவடிக்கைகளில் தீ வி ர ஆர்வம் காட்டிவருகின்றார்.
மெல்பேர்னில் சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொண்டவேளை இந்திய அணியை எ தி ர்கொள்வதற்கான பயிற்சிகளை ரன்தீவ் வழங்கியிருந்தார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை என்னை வலை பயிற்சிகளிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டது நான் சிறிய சந்தர்ப்பத்தை கூட தவறவிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.