அ.டி.க்கடி முகம் கழுவுவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?

597

முகத்தை கழுவுதல்………..

அடிக்கடி முகத்தை கழுவுவதால், சரும நோய் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையானது.

ஆனால், எண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும், முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீ.க்.கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம்.

அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும். ஆனால், முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் இருக்கும் ரசாயன பொருட்கள் சருமத்தின் மென்மையையும், இயற்கையான பளபளப்பையும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி, முகம் எண்ணெய் பசைமிக்கதாக இருந்தால் டோனர் பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.

சென்சிட்டிவ்வான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். அப்படி இல்லையெனில் கு.ழ.ந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பையும் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு முகத்தை 3 முறைக்கு மேல், அதிக நேரம் கழுவவோ, துடைக்கவோ கூடாது.