ஆசைக்கு இணங்கினால் கடன்! விவசாயி மனைவி மீது ஆசைப்பட்ட வங்கி மேலாளர்!!

449

இந்தியாவில் பயிர்க்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்திய மேலாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் ததாலா பகுதியில் இருக்கும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கிக்கு கடந்த ஜுன் மாதம் 18-ஆம் திகதி விவசாயி ஒருவர் தன் மனைவியுடன் பயிர்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

அப்போது வங்கியின் மேலாளரான ராஜேஸ் ஹிவாசே, விவசாயி விண்ணப்பித்த படிவத்தில் இருந்த அவரின் மனைவியின் போன் நம்பரை எடுத்து, அவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பேசிய போது பயிர்க்கடன் உனக்கு வேண்டும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றால் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதோடு விட்டதுமட்டுமின்றி வங்கியில் பணியாற்றும் உதவியாளர் மனோஜ் சவான் (37) என்பவரை அந்த விவசாயியின் வீட்டிற்கே அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு நேரிலும் வற்புறுத்தச் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக அங்கிருக்கும் மல்காபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது அவர், வங்கி மேலாளர் ஆசைக்கு இணங்குமாறும் செல்போனில் பேசும் உரையாடலை பதிவு செய்து ஆடியோவை ஆதாரமாகவும் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் வங்கி மேலாளருக்கு தெரியவர அவர் தலைமறைவாகியதால், அவருக்கு உதவியாக இருந்த வங்கி உதவியாளர் மனோஜை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் மேலாளரை பிடிப்பதற்கு பொலிசார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.