கோவை…
கோவையில் ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஓட்டுனர் சுதாகரன்.
இவருக்கும் பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய சுதாகரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதாகரனை கைது செய்தனர்.