ஆணிகளை விழுங்கிய 2 சிறை கைதிகள்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

247

சிறை கைதிகள்..

மத்திய சிறையில் 2 கைதிகள் ஆணிகளை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில், போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இச்சம்பவத்தை கண்டித்தால், 9 கைதிகள் த.ற்.கொ.லைக்கு முயன்றனர். அவர்களுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த நாள் மாலை கைதிகள் சுகன்(28), பிரதீப் (26) ஆகியோர் திடீரென இரும்பு ஆணிகளை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்றனர்.

இதன்பின்னர், 2 பேரையும் அங்கிருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கைதிகள் 2 பேரும், அவரது குடும்பத்துடன் தொலைபேசி வழியாக பேச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கைதி சுகன், பிரதீப் நேற்று மாலை அவர்களது குடும்பத்தினருக்கு போன் செய்து அதிக நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது. மற்ற கைதிகளும் பேச வேண்டும் என்பதால் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த சுகன், பிரதீப் ஆகியோர் இரும்பு ஆணியை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்றது தெரியவந்தது.