ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் நடந்த துயர சம்பவம்: குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

493

பிரித்தானியா….

பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட இளம் தாயார் ஒருவர், அதனால் ஏற்பட்ட சிக்கலால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 35 வயதான Alpa Tailor தமது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு ஒருவார காலம் அவருக்கு லேசான தலைவலி இருந்து வந்துள்ளது.

திடீரென்று ஏப்ரல் 8ம் திகதி அவரது உடலின் ஒரு பகுதி மொத்தமாக ஸ்தம்பித்துப் போக, அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளனர்.

வலிப்பு நோயின் அறிகுறிகளுடன் காணப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை முன்னெடுத்துள்ளனர். அதில் தடுப்பூசியால் ஏற்படும் ஒருவித பாதிப்பு என்பதை உடனடியாக கண்டறிந்துள்ளனர்.

இது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொள்ளும் 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 50,000 பேர்களில் ஒருவருக்கு வரும் பாதிப்பு என கூறப்படுகிறது.

ஆல்பா அனுமதிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் பிரித்தானியா முழுமையும் இதே பாதிப்பால் 250 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 50 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 22ம் திகதி ஆல்பாவுக்கு மூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதுடன், தீவிர பரிசோதனையில் அது ரத்த உறைதல் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஆல்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஆல்பாவின் கணவர் அனிஷ் இதை உறுதி செய்துள்ளதுடன், ஆல்பாவின் மறைவு கண்டிப்பாக மொத்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட இழப்பு என்றார்.