இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விஜய்யின் வீடு!!

698

ஆரம்பத்தில் சாலிகிராமம் வீட்டில் வசித்து வந்த விஜய் அதன் பின்பு அடையார் பகுதிக்கு குடிப்பெயர்ந்தார். சாலிக்கிராமத்திலுள்ள வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.

அதன்பின்பு விஜய்க்கு குழந்தைகள் பிறந்த பின்பு இடப்பற்றாக்குறை காரணமாக அடையாறில் இருந்த வீட்டினை விட்டு நீலாங்கரைப் பகுதியில் அமைதியான சூழலில் ஒரு வீட்டைக் கட்டி குடிபெயர்ந்தனர்.

அந்த வீடு இப்போது நெருக்கடி நிறைந்த பகுதியாக மாறியதால் மீண்டும் ஆடம்பரமாக ஒரு வீட்டைப் பனையூரில் கட்டினார். அங்கே சென்ற பின்பு விஜய்யின் நடமாட்டம் மிக ரகசியமாகிவிட்டது.

இந்நிலையில் விஜய் தனது நீலாங்கரை வீட்டை இடித்துக்கட்டி வருகிறார். அவரது விருப்பப்படி வீடு முழுமையாக இடிக்கப்பட்டுவிட்டது. பிள்ளைகள் பிற்காலத்தில் செளகர்யமாக வளர அந்த வீட்டை அவர் பயன்படுத்தலாம் என அவரது நெருங்கிய வட்டம் கூறுகிறது. மேலும் அதிநவீன வசதியாக அந்த வீடு மாற்றப்பட இருப்பதாக, அங்கே பணி புரியும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.