சீனாவில் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையான முதியவருக்கு கழுத்தில் வளர்ந்த பெரிய கட்டியால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் 68 வயது முதியவர் ஒருவர் மூச்சுவிட முடியாத அளவுக்கு கழுத்தில் கட்டியுடன் மருத்துவர்களை நாடியுள்ளார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த 30 ஆண்டுகளாக தினசரி மது அருந்தி வந்ததும், அதை உணவுப்பழக்கமாகவே கடைபிடித்து வந்ததும் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.
13 வயதில் இருந்தே மது அருந்தும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட அந்த நபர் நாளடைவில் அதை கைவிட முடியாமலும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அவரது கழுத்தில் சின்னதாய் ஒரு கட்டி இருப்பதாய் கண்டறிந்துள்ளார்.
அது பெரிதாகி 2011 ஆம் ஆண்டு கழுத்தும் முழுவதும் வியாபித்துள்ளது.
மருத்துவர்களை நாடினாலும், அது ஆபத்தானது அல்ல எனவும் மருந்துகளால் குணப்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நாளாக குறித்த நபருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு இறுதியில் கட்டி இருந்த பகுதியில் வலியுடன் மூச்சு விட பிரயாசைப்பட்டுள்ளார்.
13 வயதில் மது அருந்த துவங்கியவர் தனது 40 வயது வரை தினமும் ஒரு லிற்றர் மது அருந்தி வந்துள்ளார்.
தனது நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த பின்னரே கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் மது அருந்துவதை நிறுத்தியுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உலக அளவில் இதுபோன்ற கட்டியானது 400 பேருக்கு மட்டுமே வந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 200 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.