இந்தியாவை உலுக்கிய கத்துவா சிறுமி கொலை வழக்கு தொடர்பான தடவியல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஒரு சிறார் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே சிறுமிக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே கடத்தல்காரர்கள் சிறுமிக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்துகள் கொடுத்ததால் சிறுமி கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்களது வாதத்தை முன்வைக்கும்போது, சிறுமி தனக்கு துன்பம் இழைக்கப்படும் போது சத்தமோ, கூச்சலோ போடாமல் இருந்திருக்க முடியுமா..?. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடாமல் எப்படி இருந்திருக்க முடியும் என பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே சிறுமி மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.