கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சுமார் 5 மணியளவில் தனது வீட்டின் தரையில் 17 வயதான லூசியா அவரது வீட்டின் தரையில் உயிரற்ற நிலையில், அவரது உறவினர் ஒருவரால் காணப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ள ரியாச்சோ பிஃரியோ நகரில் வசிக்கும் லூசியா பினஹெரியோவை மருத்துவமனைக்கு “மிக விரைவாக” கொண்டு சென்றும் கூட, அவளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அவருக்கு என்ன நேர்ந்தது.? அவர் எப்படி இறந்தார்.? என்பதை அறிந்தபின்னர் ஸ்மார்ட்போனின் மீதான அச்சமும், முக்கியமாக ஹெட்செட் மீதான மரண பயம் தொற்றிகொள்கிறது என்றே கூறவேண்டும்.
ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் ஏற்றும்போது அதை பயன்படுத்துவதே தவறு என்று பரிந்துரைக்கும் நிலைப்பாட்டில், தனது மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதை பயன்படுத்தியது மட்டுமின்று அதனோடு இணைக்கப்பட்ட ஹெட்போனை காதுகளுக்குள் பொருத்தியிருந்த மாணவி ஒருவர், மிகவும் விபரீதமான முறையில் பலியாகியுள்ளார்.
அவர் மீது மின்சாரம் பாய்ந்தது மட்டுமின்றி காதுகளில் அணிந்திருந்த ஹெட்போன் உருகிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சார்ஜரில் செருகப்பட்டிருந்த அவரின் மொபைல் ஒரு “பெரிய அளவிலான மின்சாரம்” மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரின் பாட்டி அளித்த தகவலின்படி, அவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ள போதும் அவரின் காதுகளில் ஹெட்ஃபோன்கள் அப்படியே இருந்துள்ளது.
இதிலிருந்து அவர் தனது செல்போனை சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்தியதால் ஏற்பட்ட மின்சார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட மொபைல் மற்றும் ஹெட்செட் உருக்குலைவு ஆகிய காரணங்களினால் மரணித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“மின் அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு தான், லூசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று மருத்துவ பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை, ஆனால் மின்னல் வெட்டுகள் இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.