நாம் சாப்பிடும் உணவுகளை சைவம், அசைவம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.சில உணவுகளை சைவம் என்று நினைத்து சாப்பிடுவோம், உண்மையில் அது சைவம் அல்ல, அசைவம் என்பதை கீழ்கண்ட பகுதிகள் விவரிக்கின்றன.அதாவது மிருகங்களின் கொழுப்பு மற்றும் இறைச்சி வகைகள் அதில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.
சூப்:சைவ சூப் என்று நினைத்து நீங்கள் ஆர்டர் செய்யும் வெஜிடபிள் மேன் சௌ சூப் ஒரு அசைவ உணவு.உணவகங்களில் தயாரிக்கப்படும் சூப்களில் சேர்க்கப்படும் சாஸ்கள் மீனில் இருந்து தயாரிக்கப்படுபவை.
நான்:நான் வகைகள் பிடிக்காத ஆட்களே இல்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் இந்த நான் சைவ உணவு அல்ல. இதில் மென்மைத்தன்மைக்காக முட்டை சேர்க்கப்படுகிறது. ஆகவே நான் என்பது ஒரு நான்வெஜ் உணவுதான்!
சீஸ்:வழக்கமாக சீஸ் என்பது பாலின் அடுத்தடுத்த நிலைகளில் பெறப்படும் ஒரு கொழுப்பு உணவு என்பதுதான் நம்பிக்கை.ஆனால் உண்மையில் பல விலங்குகளின் குடலில் இருந்து எடுக்கப்பட்ட நொதிகள் இணைந்து தான் சீஸ் தயாரிப்பு நடைபெறுகிறது.
எண்ணெய்:எண்ணெயில் என்ன அசைவம் என்ற யோசனை வருகிறதா. சில எண்ணெய்களில் ஒமேகா 3 உள்ளதாக விளம்பரம் பார்த்திருப்போம். இந்த ஒமேகா 3 மீன் எண்ணெயில் இருந்து எடுக்கப்பட்டு சமையல் எண்ணெயில் கலக்கப்படுகிறது.
சர்க்கரை:சரக்கரையா அது கரும்பிலிருந்துதானே தயாராகிறது என்கிறீர்களா. இல்லை. இயற்கை கார்பனை உபயோகித்துதான் சர்க்கரை சுத்திகரிப்பு நடைபெறுகிறது.இயற்கை கார்பன் என்பது என்னவென்றால் எலும்புகளை கருக்கி அதிலிருந்து எடுக்கப்படுகிறது. எலும்புகள் என்பது விலங்குகளின் எலும்புகள் என்பது உங்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை.
பீரும் ஒயினும்:பீர் என்பது பார்லி தண்ணி ஒயின் என்பது திராட்சை சாறு என்றுதான் பலரும் நினைத்து பருகி வருகிறோம். உண்மையில் இவை இரண்டையும் தெளிய வைக்க மீன் பசை கூழ் மற்றும் மீன் நீர் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜெல்லி:ஐஸ்கிரீம் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் செய்ய பயன்படுத்தும் ஜெல்லியில் ஜெலட்டின் எனப்படும் பொருள் இருக்கிறது. இது விலங்குகளில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆகவே இது ஒரு அசைவ பொருள்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்:என்னது என்று புருவங்களை உயர்த்து முன் நீங்கள் வாங்கும் சிப்ஸின் பிளேவரை கவனித்து பார்த்து வாங்குங்கள், பார்பிகியூ பிளேவரில் சிக்கன் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. ஆகவே கவனம்.
வெஜிடபிள் சாலட்:உண்மையில் கடைகளில் நீங்கள் வாங்கி உண்ணும் சாலட்களில் காய்கறிகளோடு முட்டையும் கலக்கப்படுகிறது, எப்படி என்றால் அதில் ஊற்றப்படும் சாஸ்களில் முட்டை கலக்கப்படுகிறது.