இந்த முறை விஜய் பிறந்தநாளுக்கு என்ன பரிசு- கீர்த்தி சுரேஷ் பதில்!

682

தமிழ் சினிமாவில் இப்போதைய தூண்கள் என்றால் அஜித்-விஜய் தான். இவர்களது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற நடிகர்கள் சில சமயம் பொறாமை கூட பட்டிருப்பார்கள்.

ஆனால் இப்படி ஒரு இடத்திலும் அவர்கள் சாதாரணமாக வரவில்லை என்பது தெரிந்தது. அண்மையில் அஜித்தின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் அமோகமாக கொண்டாடப்பட்டது. அடுத்து இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜுன் 22. இதற்காக விஜய் ரசிகர்களும் பல பிளான்கள் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகையர் திலகம் படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்போது அவரிடம் கடந்த வருடம் விஜய் பிறந்தநாளுக்கு ஓவியம் பரிசாக கொடுத்தீர்கள், இந்த முறை என்ன என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் தெரியவில்லையே, இனி தான் முடிவு செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.