இன்றைய நாளுக்கான ராசிபலன் (23-05-2021) உங்களுக்கு எப்படி ?

458

இன்றைய ராசிபலன்………………

மேஷம்

மேஷம்: குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பிள்ளைகளின் வருங்காலதிட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியசிந்தனைகள் மனதில் தோன்றும்.நட்பு வட்டம் விரிவடையும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

மிதுனம்

மிதுனம்: அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றிமுடியும். வியாபாரத்தில் திடீர் லாபம்உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியத்துடன் வெல்லும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம்கைக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம்வரும் . உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களேபார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை நம்பி ஏமாற வேண்டாம். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிககவனம் தேவை. செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியசிந்தனைகள் மனதில் தோன்றும்.வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய சலுகைகளால் லாபம் வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி முக்கியத்துவம் தருவார். இனிமையான நாள்.

தனுசு

தனுசு: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவுதிருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில்புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.