இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் இருக்கும் சில வேலைகளை சிறப்பாக செய்து முடித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை சிந்தித்து எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீட்டிய திட்டங்கள் சிறப்பாக நிறைவேறும் காலமாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வேலையில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இலக்குகளை அடைய போராடுவீர்கள். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் தரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை தேவை.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிரிகளின் தொல்லை கவலை அளிப்பதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டில் எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக அமையும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதக பலன்களை காண இருக்கிறீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நேரம் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சுமாரான பலன்கள் உண்டு. நீண்டநாள் நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அக்கறையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒருவிதமான குழப்ப நிலை நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பொலிவிழந்து காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களுக்கு வெற்றிகரமான ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்யம் சிறப்பாக இருக்க உணவு கட்டுப்பாடு அவசியம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிலையில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பதன் மூலம் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைய விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கடன் தொகைகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் பல்வேறு ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுப்பது நஷ்டத்தை கொடுக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்க கவனத்துடன் இருப்பது நல்லது.