இன்றைய ராசிபலன்……………………….
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
கன்னி
கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
துலாம்
துலாம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
தனுசு
தனுசு: கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.
மகரம்
மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார் .தொட்டது துலங்கும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள் பாராட்டு கிடைக்கும்.
மீனம்
மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு விட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.