இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மிதுனம்
மிதுனம்: ராஜதந்திரமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.
கடகம்
கடகம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வானத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
சிம்மம்
சிம்மம்: கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு நல்லது சொல்லப் போய் கெட்டதாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறை வேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் பணிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப் படும் நாள்.
துலாம்
துலாம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகளுக்கு உதவு வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: வழக்கு சாதகமாக திரும்பும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.
தனுசு
தனுசு: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
மகரம்
மகரம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியிலிருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
கும்பம்
கும்பம்: உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை தருவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் அதிகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு உயரும். தடைகள் உடைபடும் நாள்.