நடிகை ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்க உள்ளார்.முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு பேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு இல்லை.
இது தொடர்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,‘சமூக வலைதளங்களால் நாம் பலவீனமடையக் கூடாது. அதிக நேரம் அதில் செலவழிக்க வேண்டும். ஆனால், நான் சமூக வலைதளங்களில் நுழையும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மே 11ஆம் திகதி ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் நுழைய உள்ளார். தற்போது கேன்ஸ் பட விழாவுக்காக அவர் பிரான்ஸ் சென்றுள்ளார்.அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.