இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சிறுமிக்கு லாரி க்ளீனரால் அரங்கேறிய சோகம்!!

484

சென்னை…

சென்னை திருவொற்றியூர் சேர்ந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளியில் வேலை இருப்பதாக சொல்லி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் பெற்றோர்கள் அளித்த தகவல்படி ஒரு அலைபேசி எண் கிடைத்தது. அந்த எண் வைத்து காவல்துறையினர் பின்தொடர்ந்து சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் இளைஞனை கைது செய்து பத்திரமாக சிறுமியை மீட்டு இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இளைஞர் வைத்து விசாரணை மேற்கொண்டதில்: சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி வயது19 லாரி கிளீனராக வேலை செய்து வந்தனர்.

சென்னை திருவொற்றியூர் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியுடன் திருப்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழக்கமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .இரண்டு முறை திருப்பதி சென்னை வந்து சிறுமியை பார்த்து விட்டு சென்றதாகவும் அதை தெரிந்த சிறுமியின் தாயார் திட்டியுள்ளார்.

இந்த விஷயத்தை சிறுமி திருப்பதியிடம் தெரிவித்தபோது தன்னுடன் வந்து விடுமாறும் திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சேலத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதன்பேரில் இருவரும் கடந்த 14ஆம் தேதி சென்னை கோயம்பேடு சென்று அங்கு இருந்து சேலம் சென்று சேலத்தில் இருந்து திருப்பதி வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருப்பதி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.