சாப்பாட்டு பிரியர்கள் பலர் இருப்பார்கள். இதில் அசைவம், சைவம் என்று பாகுபாடு கிடையாது. சாப்பாடு என்பது வெறும் உணவு மட்டுமின்றி சிலருக்கு அது உணர்வு பூர்வமான விஷயமாக மாறிவிடும்.
நாக்கு ருசியை இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கிசாப்பிட சொல்லும். 3 வேலையும் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு உடலை அசைக்க படாதபாடு பாடுபடுவோரையும் நாம் பார்த்திருப்போம்.
இதன் விளைவு உடல் பருமன் உள்ளிட்ட பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதோடு ‘சாப்பாட்டு ராமன்’ என்று பலரது கேலி, கிண்டல்களுக்கும் ஆளாக நேரிடும்.
இதை தவிர்க்க இங்கே 15 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி பாருங்கள் நல்ல முடிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.மன அழுத்த சூழ்நிலை உங்களது உண்மையான உணர்வுகளுக்கு தீர்வு இல்லாமல் அதிகப்படியாக சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அதனால் அதிகம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்றால் உங்களது கவலைகளை எதிர்கொள்ள தொடங்க வேண்டும்.
அது எந்த வகை கவலையாக இருந்தாலும் சரி. இதயமே வெடித்துவிடும் கவலையாக இருந்தாலும், நீண்ட கால ஆசையாக இருந்தாலும் சரி அதை எதிர்கொண்டால் அதிகளவு உணவு சாப்பிடுவதை குறைந்துவிடும். அதோடு பிரச்னைகளையும் நிதானமாக கையாளலாம்.
உங்களை உணர்வுகளை நீங்களே புரிந்துகொண்டால் அதிக பிரச்னைகளை தவிர்த்துவிட முடியும்.அதிக பிரச்னைகள் நீங்களே தவிர்க்காமல் இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். இது அதிக மன அழுத்தம், தாழ்வு மனப்பாண்மையாக மாறிவிடும்.
நீங்கள் குறைவான கவலை மற்றும் ஆசைகளோடு இருக்கும் சமயங்களில் உணவு பக்கம் உங்களது கவனத்தை திருப்பினால் நல்ல முறையில் இருக்கும்.
உங்களது கவலைகளை தடுக்கலாம். இந்த முறையில் நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களில் இருந்து நீங்கள் சற்று மாறுபடலாம். மற்றவர்களை விட நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். இது உண்மை.
இதில் கொடுக்கப்பட்டுள்ள 2 விபரங்களை நேரம் எடுத்து நன்கு உணர்ந்து பின்னர் செயல்படுத்த வேண் டும்.உங்களுக்கு பசி இருப்பதாக உணர்ந்தாலோ? அல்லது திடீரென ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலோ? ப்ரோகோலி சோதனையை மேற்கொள்ளுங்கள்.
ப்ரோக்கோலியை கற்பனை செய்து கொண்டு பசி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்.இதில் தங்களுக்கு உடன்பாடான பதில் வந்தால் உண்மையிலேயே பசி என்று தான் அர்த்தம். இல்லை என்றால் உங்களுக்கு தேவையற்ற கலோரிகள் மீது ஆசை வந்துள்ளது என்று அர்த்தம்.
உப்பு மற்றும் இனிப்பு சார்ந்த உணவு பொருட்கள் மீது ஏற்படும் ஆசை தான் சாப்பாட்டு பிரியர்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.அதனால் உங்களது தூண்டுதல்களை அடையாளம் காணும் வகையில் அதை ஒரு நோட்டு புத்தகத்தில் பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக சினிமா பார்க்கும் போது, பணியில் இரு க்கும் போது, பொழுது போகாத சமயம், பணியில் சோகம் போன்ற சமயங்களில் சாப்பிட தோன்றும்.
அதனால் இத்தகைய சூழ்நிலைகளை பட்டியலிட்டு வைத்தால் அதிகம் சாப்பிடுவதை குறைக்கு உதவும்.உடல் பருமன் மற்றும் சாப்பாட்டை குறைக்கும் செயல்பாட்டில் உடற்பயிற்சி என்பது முக்கியமான விஷயமாகும்.
இது உங்களது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். உடலை சுத்தப்படுத்தவும் பயிற்சி உதவும்.இதன் மூலம் நல்ல ஹார்மோன்கள் இருப்பதை உணர்வீர்கள். உடல் எடை குறையும்.
உணவு மீதான நாட்டம் குறையும். மன கவலை அடையும் போது கலோரிகள் நிறைந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதை தவிர்த்து அதற்கு பதிலாக வாக்கிங், ரன்னிங், நீச்சல், வெளிப்புற விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
தினமும் தியானம் மற்றும் ரிலாக்ஸூக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். இது உங்கள் மனதையும், உடலையும் பத்திரமாக வைத்துக் கொள்ளும்.