இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள் : கணவர்களை அடிக்கடி மாற்றி கொள்கிறார்களா?

1093

இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள்

அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர்களை இரண்டு பெண்களும் மாற்றி கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.

ஜோஸ் மற்றும் ஜெரிமீ சல்யர்ஸ் ஆகிய இரட்டை சகோதரர்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை சகோதரிகளான பிரிட்டனி மற்றும் பிரியனா ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பிரிட்டனி மற்றும் பிரியனா ஆகிய இருவரும் தங்கள் கணவரை மாற்றி கொள்வார்கள் என செய்தி பரவியது. இது குறித்து பிரிட்டனி அளித்துள்ள பேட்டியில், இரட்டை சகோதரிகளான நாங்கள் இரட்டை சகோதர்களை திருமணம் செய்துள்ளோம்.

இது விசித்திரமான நிகழ்வு என்பதை அனைவரும் அறிவீர்கள். நாங்கள் 4 பேரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். நானும், பிரியனாவும் கணவரை அடிக்கடி மாற்றி கொள்கிறோமா என பலரும் கேட்கின்றனர்.

அப்படியெல்லாம் கிடையாது என கூறி கொள்கிறேன். நாங்கள் இருவரும் இந்தாண்டு ஒரே நேரத்தில் கர்ப்பமாவோம் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.