இரட்டை குழந்தைகளுக்கு..
துபாயில் வசிக்கும் இந்திய இளைஞருக்கு Big Ticket Abu Dhabi லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான அடுத்த இரண்டாவது நாளில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிஜேஷ் போஸ்.
அதன்படி அவருக்கு கடந்த 23ஆம் திகதி நடந்த Big Ticket Abu Dhabi குலுக்கலில் 1 million Dirham (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 5,51,32,777.59) பரிசு விழுந்துள்ளது. துபாயில் கணக்காளர் பணியாற்றி வரும் போஸ் இந்த பரிசை 14 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
போஸ் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு என் மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இப்போது எனக்கு மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
எனது இரண்டு குழந்தைகளும் பிறக்கும் போதே என் வாழ்க்கையில் கூடுதல் அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளனர் என நம்புகிறேன், இது என் வாழ்வையே மாற்றிய தருணம்.
அவர்கள் பிறந்த அதிர்ஷ்டமே என் வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார். இதனிடையில் ஜனவரி 3ஆம் திகதி மெகா திர்ஹாம் 25 மில்லியன் பரிசு மற்றும் இரண்டாவது பரிசான திர்ஹாம் 2 மில்லியன் பரிசை வெல்வதற்கான வாய்ப்பும் போஸுக்கு ஏற்பட்டுள்ளது.